பாலியல் புகார் கூறிய மாணவியின் அறையில் 2 பக்கமும் தாழ்ப்பாளே இல்லையாம்... விசாரணையில் திடுக்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாணவி பாலியல் புகார்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்- வீடியோ

    திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வேளாண் அரசு கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அந்த மாணவியின் அறைக்கு தாழ்ப்பாளே இல்லை என்பது தெரியவந்தது.

    திருவண்ணாமலை தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னை மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.

    மாணவி

    மாணவி

    எனினும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவியை தங்கபாண்டியன் அறைக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். இதனால் அந்த மாணவி பெற்றோர் மூலம் கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தார்.

    கல்லூரி முதல்வரிடம்

    கல்லூரி முதல்வரிடம்

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று கல்லூரிக்கு சென்று மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினார்.

    5 பேர் குழு

    5 பேர் குழு

    அப்போது மாணவி தங்கியிருந்த விடுதி அறையை பார்வையிட்டார். அப்போது அந்த அறைக்கு உள்தாழ்ப்பாளும் வெளித் தாழ்ப்பாளும் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நீதிபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மாணவி கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து 5 பேர் கொண்ட குழு இன்று வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு விசாரணை நடத்த வருகின்றனர்.

    விசாரணை

    விசாரணை

    அந்த குழு மாணவி மற்றும் புகாரில் சிக்கியுள்ள பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளிடம் விசாரணை நடத்துகின்றனர். அதன் அடிப்படையில் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மனித உரிமை கழகத்தினரும் விசாரணை நடத்த வருகின்றனர் என்றார் மகிழேந்தி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+