For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி பிரதமரானால் இலங்கை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: யஷ்வந்த் சின்கா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியினை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று யஷ்வந்த் சின்கா கூறினார்.மோடி பிரத

சென்னை எழும்பூரில், மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான யஷ்வந்த சின்கா, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காந்திய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்கா பேசும்போது கூறியதாவது:

மனித உரிமை மீறல்கள்

மனித உரிமை மீறல்கள்

''இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு துணை நின்றது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான். அந்த இரு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது பாவச்செயல்.

கடற்படையும் காரணம்

கடற்படையும் காரணம்

இலங்கை இனப் படுகொலைக்கு இந்திய கடற்படையும் ஒரு காரணம். பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவுக் கொள்கையை பலவீனமாக கையாள்கிறார்.

மீனவர்கள் பிரச்சினை

மீனவர்கள் பிரச்சினை

வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டுடன் இருந்திருந்தால் தமிழக மீனவர்கள் தினசரி தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்காது. மீனவர்களின் பிரச்சினையை இந்தியா சரியாக கையாளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

உத்தரவாதம் தராத இலங்கை

உத்தரவாதம் தராத இலங்கை

அண்மையில் மியான்மரில் பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றியோ, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்வது பற்றியோ எந்த உத்தரவாதமும் ராஜபக்சே அளிக்கவில்லை.

மோடி பிரதமரானால்

மோடி பிரதமரானால்

மத்தியில் நிலையான ஆட்சியை கொண்டுவருவதன் மூலம், இலங்கையில் சமநிலையை கொண்டுவர முடியும். மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் போது மீனவர்கள் பிரச்சினைக்கும், இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்றார் யஷ்வந்த் சின்கா.

English summary
Attacking the UPA government's foreign policy, senior BJP leader Yashwant Sinha on Monday said there would be a complete change in the 'personality' of the Indian government if Narendra Modi becomes the Prime Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X