மதுரை: மதுரையில் எஸ் எஸ் காலனியில் இருக்கும் பூட்டிய வீட்டில் 90 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது.
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் பெரியவர் தெருவில் வசித்து வருகிறார் பாலகிருஷ்ணன். இவர் சொந்தமாக செங்கல் சூலை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதாவது டிசம்பர் 30ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில் தரிசனத்திற்காக மைசூர் வரை குடும்பத்தோடு சென்றுள்ளார். இவர் ஊருக்கு சென்ற நிலையில் இவர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருக்கின்றனர்.
அவர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 90 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!