ராஜபக்சேவின் கோரிக்கையை இந்தியா ஏற்பதா?: திருமா. கண்டனம்
சென்னை: ராஜபக்சேவின் கோரிக்கையை ஏற்று 16 அமைப்புகளுக்கு தடைவிதித்துள்ள மத்திய அரசுக்கு, விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமானவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் 16 அமைப்புகளுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் திடீரென ராஜபக்சே தடை விதித்து அதை ஏற்க உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை இந்திய அரசு உடனடியாக ஏற்றுகொண்டுள்ளது. இந்திய அரசின் இந்த போக்கை விடுதலை சிறுத்தை மிக வன்மையாக கண்டிக்கிறது.
இனப்படுகொலை குற்றத்திற்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் சிங்கள அரசை சர்வதேச புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அண்மையில் ஜெனிவாவில் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை காரணம் காட்டி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ராஜபக்சேவின் கோரிக்கையை புறக்கணித்துள்ளன. ஆனால் வழக்கம் போல ராஜபக்சேவிற்கு ஆதரவாக தமிழ் ஈழத்திற்கு எதிராக இந்திய அரசு நிலைப்பாடு மேற்கொண்டுள்ளது. இது தமிழினத்திற்கு மட்டுமல்ல, ஐ.நா தீர்மானத்திற்கும் எதிரான நடவடிக்கையாகும்.
இந்திய அரசு தனது நிலைப்பாட்டை திரும்ப பெற வேண்டும். தமிழ் ஈழ அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ராஜபக்சேவை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications