For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேருந்து கட்ட ண குறைப்பால் மக்களுக்கு பயனில்லை... திருமாவளவன் கண்டனம்!

பேருந்து கட்டணத்தை ஒரு ரூபாய் அளவில் குறைத்து விட்டு தமிழக அரசு பொறுப்பில்லாமல் இருப்பதாக திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்து கட்டண குறைப்பால் மக்களுக்கு பயனில்லை...வீடியோ

    திருநெல்வேலி : தமிழக அரசு சொற்ப அளவில் பஸ் கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் மக்களின் பொருளாதார காரணத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பஸ் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு கடந்த வாரம் திடீரென பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கதப்பட்டனர். இந்நிலையில் அனைத்து கட்சி சார்பில் திமுக போராட்டம் நடத்தியது. தற்போது தமிழக சொற்ப அளவு பஸ் கட்டணத்தை குறைந்துள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராது.

    Thirumavalavan condemns government as bus fare reduced is not sufficient

    தமிழக மக்களின் பொருளாதார காரணத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற்றால் எதிர்கட்சிகளுக்கு நல்ல பெயர் வந்து விடும் என நினைக்க கூடாது. பொது மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாய தொழிலாளர் சார்பில் காவிரி தண்ணீர் வேண்டி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திற்கு முறையாக வரவேண்டிய தண்ணீரை மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுத்து பெற்று தர வேண்டும். தமிழக மீனவர்களை பாதிக்கும் வகையில் இலங்கை அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு ஐநா சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கூறினார்.

    English summary
    VCK leader Thirumavalavan condmens the reduced bus fare is a not beneficciary to people so government will reduce all the fare considerably as before the hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X