கெயில் எரிவாயு குழாய்கள் பதிப்பதை கைவிடுங்கள்... எடப்பாடியை சந்தித்து திருமா வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கெயில் எரிவாயு குழாய்கள் பதிப்பதை கைவிடுங்கள் என்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைைம செயலகத்தில் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்து பேசுகையில், அனைத்து சாதியனரையும் அர்ச்சகராக்கலாம் என்பதில் தமிழகம்தான் முன்னோடியாக உள்ளது.

Thirumavalavan discusses about Dengue protection process

கேரளாவில் பிற சமுதாயத்தினர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய புரட்சி ஆகும். தமிழகத்திலும் பிற சமுதாயத்தினரை அர்ச்சகராக நியமிக்க முதலமைச்சர் பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அம்பேத்கர் மணிமண்டபத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளோம். டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வரிடம் பேசினேன். கெயில் எரிவாயு குழாய்கள் பதிப்பதை கைவிட வலியுறுத்தினேன் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK Chief Thirumavalavan to discuss about Dengue protection process in TN Secretariat.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற