கட்டுவிரியன்... கண்ணாடி விரியன்... நல்லபாம்பு... கொதிப்பை ஏற்படுத்திய திருமாவின் பேச்சு
மதுரை: இன்றைக்கு தமிழக அரசியலில் ஆட்சி நடத்தும் கட்சி கட்டு விரியன் பாம்பாக உள்ளது.இதற்கு மாற்று நான் தான் என்று கூறும் கட்சி கண்ணாடி விரியனாக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்று நான் தான் என்றுகூறிக் கொள்ளும் கட்சி நல்ல பாம்பாக படமெடுக்கிறது. விரியன் பாம்பும் வேண்டாம்; நல்ல பாம்பும் வேண்டாம். ஊழல்புற்றுகளை உடைத்தெறிந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள்நலக் கூட்டணி புறப்பட்டுள்ளது என்று மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் திருமாவளவன் பேசியதுதான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக்.
தி.மு.க தலைவர் கருணாநிதியையோ, முதல்வர் ஜெயலலிதாவையோ பாம்பென்று சொல்லவில்லை என்று சில நாட்கள் கழித்து அவரே விளக்கமும் அளித்து விட்டார். கட்டுவிரியன், கண்ணாடி விரியனுக்கு விளக்கமளித்த அவர் நல்லபாம்புக்கு விளக்கம் அளிக்கவில்லை.
மக்கள் நலக் கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இந்தக்கூட்டணி ஆட்சி அமைக்கும். அது கொள்கை அடிப்படையிலான கூட்டணி ஆட்சியாக அமையும் என்றும் பேசியுள்ளார்.

மாற்று அரசியல்
மதுரை என்றாரே அனலுக்கு பஞ்சமிருக்காது. பிரம்மாண்ட கூட்டத்தைப் பார்த்த உடனே உற்சாகமடைந்த திருமாவளவன், இந்த மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும். யானை மலையை உடைக்க முடியாது. அதுபோல் மக்கள் நலக்கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. மாற்று அரசியல், மாற்றுப்பாதையில் மக்கள் நலக்கூட்டணி பயணத்தை துவங்கியிருக்கிறது.இதனால் பலருக்கு அடிவயிறு கலங்கியிருக்கிறது. அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். நாம்தான் மாற்று அரசியலை முன்வைக்கிறோம் என்று சூடாகவே ஆரம்பித்தார்.

பாம்பு உதாரணம்
இன்றைக்கு தமிழக அரசியலில் ஆட்சி நடத்தும் கட்சி கட்டு விரியன் பாம்பாக உள்ளது.இதற்கு மாற்று நான் தான் என்று கூறும் கட்சி கண்ணாடி விரியனாக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்று நான் தான் என்றுகூறிக் கொள்ளும் கட்சி நல்ல பாம்பாக படமெடுக்கிறது. விரியன் பாம்பும் வேண்டாம்; நல்ல பாம்பும் வேண்டாம். ஊழல்புற்றுகளை உடைத்தெறிந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள்நலக் கூட்டணி புறப்பட்டுள்ளது என்று பேச கூட்டத்தில் விசில் பறந்தது.

தேர்தல் யுத்தம்
கபடி விளையாட்டில் களத்தில் விளையாடுபவர் காயமடைந்தால் மாற்று ஆளை இறக்கிவிடுவார்கள். அதற்கு சப்சிட்டியூட் என்றுபெயர். நாங்கள் சப்சிட்டி யூட் அல்ல; ஆல்டர்னேட், மாற்று. இந்தக் கூட்டணி ஜனநாயகமானது; அடிப்படை மக்களுக்கானது. இது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் நடக்கும் யுத்தம் என்றும் பேசினார்.
|
பாம்புகளுக்கு மகுடி
மதுவியாபாரிகளிடமிருந்து தமிழகத்தை மீட்க மக்கள் நலக்கூட்டணி போராடும்; இது தொடரும். அதிமுக, திமுக இரண்டும் வரக்கூடாது என்பதற்காகத்தான் மக்கள் நலக்கூட்டணி மாற்று அரசியலை முன்வைக்கிறது. ஒரு கட்சி ஆட்சி கூடாது.50 ஆண்டுகளாக நடைபெறுகின்ற இரு கட்சிகளின் ஆட்சியை அகற்றி, புதிய மாற்றத்தை ஏற்படுத்த கூடியிருக்கிறோம். கூட்டணி ஆட்சி கருத்தியலை அதிமுக, திமுக ஒப்புக்கொள்ளுமா? மக்கள் நலக்கூட்டணி கூட்டணி ஆட்சியை விரும்புகிறது என்று முடித்தார்.
|
அப்போ நீங்க
மீம்ஸ் என்றாலே வடிவேல் இல்லாமா? திருமாவின் பாம்பு உதாரணத்திற்கு சிக்கியது கடைசியில் சிக்கியது வடிவேல்தான்.
|
தில் வேணும்
திருமாவளவனின் பாம்புகள் உதாரணம் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தவே அவரை வகை தொகையில்லாமல் திட்டி தீர்த்தனர். ஆனால் சிலரோ திருமாவளனை பாராட்டியுள்ளனர்.

அது வேற வாய்
பிரம்மாண்ட கூட்டத்தில் பாம்பு உதாரணம் சொல்லி பேசிய திருமாவளவன், தனது பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து, கட்டுவிரியன் என்னும் ஊழல் பாம்புக்கு கண்ணாடிவிரியன் என்னும் ஊழல் பாம்பு எப்படி மாற்றாக இருக்க முடியும்?" என்றும், அதேபோல, "ஊழல் பாம்புகளுக்கு சாதிப் பாம்பு எப்படி மாற்றாக இருக்க முடியும்? என்று கேட்டதாக கூறுகிறார் திருமாவளவன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications