மக்கள் நலக் கூட்டணியை வலுப்படுத்த விஜயகாந்த் வர வேண்டும்: திருமாவளவனும் அழைப்பு
செங்கல்பட்டு: மக்கள் நலக் கூட்டணியை வலுப்படுத்த விஜயகாந்த் வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இருப்பினும் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என அவரது மனைவி பிரேமலதா தெரிவித்தார்.

இந்நிலையில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து பாஜக பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலதாவுக்கும் பாஜகவுடன் சேரவே விருப்பம் இருப்பதாக கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விஜயகாந்துக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே விஜயகாந்த் திமுக-காங்கிரஸ் கூட்டணி வர விரும்பினால் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை சமூகமாக நடந்தது. இந்த கூட்டணியை வலுப்படுத்த விஜயகாந்த் வர வேண்டும் என்று விரும்புகிறோம். கூட்டணிக்கு வருமாறு அவரை நேரில் சந்தித்து விடுத்த அழைப்பு இன்னும் அப்படியே தான் உள்ளது. அவர் நல்ல முடிவுக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications