அரசு பள்ளி.. ஹெச்.எம்.மின் கையை கடித்த செல்வி டீச்சர்..அழுதுகொண்டே நாங்குநேரி போலீசுக்கு ஓடிய கொடுமை
நெல்லை: தலைமை ஆசிரியை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியிருக்கிறார் செல்வி டீச்சர்.. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்திலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா ஜெய செல்வி என்பவர் கெமிஸ்ட்ரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. இவர், அந்த பள்ளியின் மாணவ மாணவிகளை கேவலமாகவும், அவதூறாகவும், ஆபாசமாகவும், இழிவாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல்கள் : அப்படித்தான், தளபதிசமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும், இந்த செல்வி டீச்சர் ஆபாசமாக திட்டினாராம்.. அதுமட்டுமல்ல, தான் திட்டியது பற்றி, வெளியே யாரிடமாவது புகார் சொன்னால், உங்களது பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.
இதனால் பயந்து போன அந்த மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்ததை சொல்லி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியான மாணவியின் பெற்றோர், நேரடியாக ஸ்கூலுக்கே கிளம்பி வந்துவிட்டனர்.. தலைமை ஆசிரியை ரெத்தின ஜெயந்தியிடம் இதை பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், செல்வி டீச்சர் மீது இப்படி ஏற்கனவே நிறைய புகார்கள், இதே தலைமை ஆசிரியருக்கு வந்திருக்கிறதாம்.. மீண்டும் பெற்றோரிடமிருந்து புகார் வந்ததால், செல்வி டீச்சரை அழைத்து பேசியுள்ளார் தலைமை ஆசிரியை.. அப்போது, இது போன்று அடிக்கடி புகார் வருவதால் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படியும் செல்வி டீச்சரிடம் கேட்டிருக்கிறார்..
செல்வி டீச்சர்: இதைக்கேட்டதுமே, செல்வி டீச்சர் இன்னும் ஆவேசமாகிவிட்டாராம்.. மாணவ, மாணவிகளை திட்டுவதுபோலவே, தலைமை ஆசிரியையும் ஆபாசமாக திட்டியிருக்கிறார். தலைமை ஆசிரியையின் கன்னத்திலேயே பளார் என அறை விட்டுள்ளார்.. அவரது கழுத்தில் கிடந்த 5 பவுண் தங்க சங்கிலியையும் பிடித்து இழுத்ததுடன், அந்த தலைமை ஆசிரியையின் கைகளை இழுத்து பிடித்து கடித்துள்ளார்.. இதனால், தலைமை ஆசிரியை, வலி தாங்க முடியாமல் அலறி கத்தி உள்ளார்..
பிறகு, அழுது கொண்டே வெளியே வந்த தலைமை ஆசிரியை, அதற்கு பிறகுதான், ஏர்வாடி ஸ்டேஷனுக்கு சென்று இதுதொடர்பாக புகார் சொன்னாராம். பிறகு, சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீசார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்..
விழித்த போலீஸ்: தலைமையாசிரியரின் தங்க சங்கிலியை தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் நகையை திரும்ப தர மாட்டேன் என்று செல்வி டீச்சர் அடம்பிடித்திருக்கிறார்.. இதனால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளனர்.. பிறகு, ஒருவழியாக அவரிடமிருந்து தங்க சங்கிலியை மீட்டு, தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர்.
ஆனால், இவ்வளவு நடந்தும்கூட, போலீசாரிடம் புகார் தருவதற்கு தலைமை ஆசையை மறுத்துவிட்டாராம்.. ஆனால், தன்னை தாக்கிய வேதியல் ஆசிரியர் ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க புகாரளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் எல்லாமே மாணவ மாணவிகள், பொதுமக்கள் கண்முன்னிலையிலேயே நடந்துள்ளது..
இறுதியில், ஆசிரியை ரத்தின ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் கீழ்க்கண்ட 6 பிரிவுகளின் கீழ் ஸ்டெல்லா ஜெயசெல்வி டீச்சர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பரபரப்பு: இதனிடையே, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து விசாரணையை மேற்கொண்டார்.. அனைவரிடமும் தனித்தனியாக என்ன நடந்தது என்பது குறித்தும், பிரத்யேகமாக எழுதி வாங்கி கொண்டார்.
ஆனால், சம்பந்தப்பட்ட கெமிஸ்ட்ரி டீச்சர் செல்வி, விசாரணைக்கு வரவில்லை.. அவர் விசாரணைக்கு வந்த பிறகு என்ன நடந்தது என்பது குறித்து அவரிடம் தெரிந்து கொண்டு பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தெரிவித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இது தொடரபான விசாரணையை துவக்கியிருப்பதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications