செந்தில் பாலாஜிக்காக.. திருவண்ணாமலையிலிருந்து வந்து அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்த அதிமுகவினர்!

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு கோரி திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினர் பிரசாரம் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்காக அதிமுகவினர் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையிலிருந்து அதிமுகவினர் திரளாக வந்து பிரசாரம் மேற்கொண்டனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். அவருக்காக பல்வேறு மாவட்ட அதிமுகவினரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

Thiruvannamalai ADMK functionaries campaign for Senthil Balaji

அந்த வரிசையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்றும் திருக்காடுதுறை ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு அப்பகுதி பெண்கள் அரத்தி எடுத்து வரவேற்றனர்.

Thiruvannamalai ADMK functionaries campaign for Senthil Balaji

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பெருமாள்நகர் கே. ராஜன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், அரவக்குறிச்சி தொகுதி பூத் என் 36 பொருப்பாளார் திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டிஸ்கோ எஸ்.குணசேகரன், பழையனூர் கே லட்சுமிநாராயணன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக ஐடி பிரிவு மாவட்டச் செயலாளர் ப.உ. சத்யபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+