அய்யோ என் ராசாத்த்"தீ".... என்னா போடு போடுது பாருங்க இந்த குட்டிப் பாப்பா!!
மெரீனா போராட்டக்களத்தில் ஒரு குட்டிப் பாப்பா பாரதியார் பாடலைப் பாடி பீட்டாவை வெளுத்து வாங்கியது அனைவரையும் கவர்ந்திழுத்தது.
சென்னை: மெரீனா போராட்டக் களத்தில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்.. அந்தக் காலத்தி்ல் வெள்ளையர்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்திய போராட்டக்களம் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நம்மை கற்பனை செய்து வைக்கும் வகையில் மாறிக் கொண்டிருக்கிறது மெரீனா போராட்டக் களம்.
இந்தக் களத்தில் இந்தக் குட்டிப்பாப்பாவின் முழக்கத்தைப் பாருங்கள்.. பாரதீயின் வரிகளை இந்த ராசாத்தீயின் வாயிலிருந்து கேட்கும்போதுதான் நமக்குள் உணர்வுகள் ஊற்றெடுப்பதை தவிர்க்க முடியவில்லை...!

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
This Girl🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏#Jallikattu #JallikattuProtest #JusticeforJallikattu #SaveOurCultureJALLIKATTU pic.twitter.com/yhRXFij6H5
— Troll Kollywood (@TKollywood) January 19, 2017
இந்த ஆவேச பாரதியின் வரிகளை இந்த குட்டிப்பாப்பா தனது மழலைக் குரலில் வீரம் செறிய பாடி நிற்பதைப் பார்க்கும் யாருக்கும் உணர்வு வராமல் என்ன செய்யும்.. அதில பாருங்க.. பாட்டை பாடி முடித்து விட்டு பீட்டா வேண்டாம், ஜல்லிக்கட்டு வேண்டும் என்று அந்த குட்டி சொல்லி முடிப்பதுதான் அழகோ அழகு!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications