For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள்.. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே கலக்கல்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ளன.

ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி ரேங்குகள் முறை இருக்காது என நேற்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட்

எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட்

இந்நிலையில் ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.

வழக்கம்போல் மாணவிகளே

வழக்கம்போல் மாணவிகளே

மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 92.1% என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 89.3% தேர்ச்சி

மாணவர்கள் 89.3% தேர்ச்சி

கடந்த ஆண்டைவிட பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 0.7 அதிகம் ஆகும். மாணவர்கள் 89.3% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 94.5% தேர்ச்சி

மாணவிகள் 94.5% தேர்ச்சி

பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.5% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி கொடுத்துள்ளன. இவற்றில் 292 அரசு பள்ளிகளும் அடங்கும்.

English summary
12th standardresult has been released. This year also gils only passed a lot than boys.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X