நெல்லையில் ஆவேசமாக பேசிய வைகோ... அசந்து தூங்கிய முத்தரசன், திருமா
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வைகோ ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அசந்து தூங்கினர். வைகோவின் பேச்சை ரசிக்காமல் தொண்டர்களும் தண்ணீர் பாட்டில்களை தூக்கிப் போட்டு விளையாடியதைப் பார்த்து ஒரு கட்டத்தில் வைகோ கோபமடைந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்காக மக்கள் நலக்கூட்டணி முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. இதுவரை நான்கு கட்ட பிரச்சாரங்களை முடித்துள்ள தலைவர்கள் தேமுதிக உடன் இணைந்த பின்னர் 5 வது கட்ட பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
திருநெல்வேலியில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

30 நிமிடங்களுக்கும் மேல் அவரது உரை நீடித்தது. பல ஆண்டு கால அரசியல் அனுபவங்களை பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், மேடையில் அமர்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தூங்கி வழிந்தனர்.
தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருவருமே தவித்தனர். வைகோ தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது, தொண்டர்களில் சிலர் மற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனைக் கண்டு வைகோ கோபமடைந்தார்.
நான் வந்து உயிரைக் கொடுத்து பேசிக்கொண்டிருக்கேன். எல்லாரும் தண்ணி பாட்டிலை எடுத்து வீசிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க என்று ஆவேசமாக பேசினார்.
வைகோ திடீரென குரலை உயர்த்தி ஆவேசமாகப் பேசுவதைக் கேட்டதும், முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகியோர், வைகோவின் பேச்சை மீண்டும் கவனிக்கத் தொடங்கினர். அவர்களின் உறக்கத்தை போக்கி சுறுசுறுப்பாக வைகோவின் பேச்சை கவனிக்க டீ மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
ஒரு கட்டத்தைல் வைகோ உரையை முடிக்க போகிறார் என நினைத்த தொல். திருமாவளவன், தொண்டர்களை நோக்கி சின்னத்தை கூறும்படி சைகை காட்டினார். இதைக் கவனித்த வைகோ, இன்னும் தான் பேச்சை முடிக்கவில்லை என்று கூறி, உரையைத் தொடர்ந்தார். மறுபடியும் முதல்ல இருந்தா என்கிற ரீதியில் தொண்டர்கள் மீண்டும் உரையை கவனிக்கத் தொடங்கினர்.
அர்ஜூனன் பேச்சை கவனிக்காமல் பீமனும், சகாதேவனுமே தூங்குறாங்களேப்பா என்று கமெண்ட் அடிக்கிறது எதிர்கட்சித்தரப்பு.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications