கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு... தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகளைப் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே கடற்கரையில் பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகள் மிதந்து வந்தன. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த எஸ்ஐக்கள் ஆதிலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மிதந்து வந்த மூட்டையை கைப்பற்றி சோதனையிட்டனர்.
அதில் 4 சிறிய பார்சல்கள் தண்ணீர் புகுதாபடி இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது 6 கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பறறிய போலீசார் கஞ்சாவை கடலில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதம் கடலில் கஞ்சா மூட்டைகள் மிதந்து வந்தது. அதற்குள் 240 கிலோ கிராம் கஞ்சா இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் கஞ்சா மூட்டைகள் கடலில் மிதந்து வந்துள்ளது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிருந்து இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் வழியில் கடலோர காவல் படையினர் கண்காணிப்பு பலமாக இருந்ததால் கடத்தல்காரர்கள் இதை கடலில் மிதக்க விட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும் கஞ்சா பார்சல் செய்யப்பட்டிருந்த பேப்பர்கள் கன்னடத்தில் எழுதப்பட்டிருந்ததால் அது கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்டு வந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துளளது. தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications