முதல்வருக்கு எப்போ வருவேன் எப்டி வருவேனு பேசவும் தசாவதாரம் எடுக்கவும் தெரியாது.. தோப்பு வெங்கடாசலம்
முதல்வருக்கு எப்போ வருவேன் எப்டி வருவேனு வசனம் பேசவும் தசாவதாரம் எடுக்கவும் தெரியாது என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்போ வருவேன் எப்டி வருவேனு... வசனம் பேசவும், தசாவதாரம் எடுக்கவும் தெரியாது என்று ரஜினி- கமலை விமர்சனம் செய்யும் வகையில் ஒரு கருத்தை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதற்கு தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்களை அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் விமர்சிக்காத நாளே இல்லை.

இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறுகையில், எப்போ வருவேன் எப்டி வருவேன் என வசனம் பேச முதல்வருக்கு தெரியாது- தோப்பு வெங்கடாசலம்
தசாவதாரம் படமும் எடுக்க தெரியாது; ஆனால் மக்களுக்கான நலத்திட்டங்களை மட்டுமே முதல்வருக்கு செயல்படுத்த தெரியும்.
அரசியலில் யார் வேண்டுமானாலும் புலியாக இருக்கலாம். ஆனால் அதிமுகவுக்கு முன்னால் அவர்கள் எலிதான் என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications