சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாசி வீதிகளில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கடந்த 10ம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

8ம் நாளான கடந்த ஞாயிறன்று பட்டாபிஷேகமும், அதைத் தொடர்ந்து திக் விஜயமும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து நேற்று இரவு மீனாட்சி, சுந்தரேசுவரர் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தனர்
தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் கீழமாசி வீதிகளில் உள்ள தேரடிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். அங்கு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
தேரோட்டம் கோலாகலம்
அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினார்கள். பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், பிரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். சிறிய தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகரும் சுப்பிரமணியரும் வந்தனர். தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து காலை 6.10 மணிக்கு பெரிய தேர் புறப்பட்டது. அதை தொடர்ந்து 6.35 மணிக்கு சிறிய தேர் புறப்பட்டது.
யானைகள், ஒட்டகங்கள்
தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை, ஒட்டகங்கள் முன்னே சென்றன. இவற்றை தொடர்ந்து சிறிய சப்பரங்கள் சென்றன. முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகனும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் சென்றன. இதையடுத்து பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், மற்ற தேரில் மீனாட்சியும் வந்தனர். இறுதியாக சண்டிகேசுவரர் சப்பரம் வந்தது.
பக்தர்கள் தரிசனம்
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர்களை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்து வணங்கினர். இத்தேர் திருவிழாவினைக் காண மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் தென் மாவட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளழகர் புறப்படுகிறார்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 22ம் தேதி நடக்கிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார். ராஜகோபுரத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் 18ம் படி கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7 மணிக்கு மேள, தாளம் முழங்க புறப்படுகிறார்.
நாளை எதிர்சேவை
அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் வழியில் பக்தர்களின் மண்டகபடிகளில் எழுந்தருளி, நாளை காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து புதுாரிலும், மாலையில் அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது.
ஆற்றில் இறங்கும் அழகர்
இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 22ம் தேதி அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தண்ணீர் திறப்பு
மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியையொட்டி, வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோடை காரணமாக வைகை அணையில் நீர் குறைந்த அளவே காணப்படுகிறது. எனவே கள்ளழகர் ஆற்றில் இறங்கு நிகழ்ச்சிக்காக இன்றிலிருந்து மூன்று தினங்களுக்கு வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications