பழனி: ‘மிஸ்டு கால்’ மூலம் வரவழைத்து வியாபாரி கொலை - பெண் உள்பட 3 பேர் கைது
பழனி: பழனியில் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்விரோதத்தில் கஞ்சா வியாபாரி தனது இரண்டாவது மனைவி மூலம் "மிஸ்டு கால்" அழைப்புவிடுத்து வரவழைத்து கொலையை அரங்கேற்றிய சம்பவம், போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பழனி பெரிய ஆவுடையார் கோயில் அருகே, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வியாபாரி கணேசன் படுகொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி தாலுகா போலீஸார் விசாரணையில் அவரது செல்போனுக்கு குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து அடிக்கடி "மிஸ்டு கால்" வந்துள்ளது. அந்த எண்ணுக்கு கணேசன், கொலை நடந்த அன்று தவிர, கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி பேசி வந்துள்ளார்.
அந்த செல்போனை வைத்திருந்த பழனி கரிகாரன் புதூரைச் சேர்ந்த மகாலட்சுமியை (22) பிடித்து போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இதில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
கணேசனுக்கும், கரிகாரன்புதூரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி நல்லுச்சாமிக்கும் (38) முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் நல்லுச்சாமி கணேசனைக் கொலைசெய்ய புது வியூகம் வகுத்துள்ளார்.
அதன்படி, தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமி மூலம் கணேசனின் செல்போனுக்கு மிஸ்டு காலில் அழைக்கச் செய்துள்ளார். உடனே அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட கணேசன், உங்கள் கைப்பேசியில் இருந்து அழைப்பு வந்துள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு மகாலட்சுமி, தெரியலையே எனப் பேச்சை இழுத்துள்ளார்.
சபலமடைந்த கணேசனுக்கு, மகாலட்சுமி இதுபோல தொடர்ந்து மிஸ்டுகால் மூலம் அழைத்து ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, நேரில் சந்திக்கலாம் எனக் கூறி கணேசனை கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே வரச் சொல்லியுள்ளார்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கணேசனை மகாலட்சுமி, பெரிய ஆவுடையார் கோயில் அருகே ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த நல்லுச்சாமி, அவரது நண்பர்கள், அய்யாவு, குருசாமி ஆகியோர் கணேசனை வெட்டிக் கொலை செய்தனர்.
இச்சம்பவத்தில் நல்லுச்சாமி, குருசாமி, மிஸ்டு கால் கொடுத்து வரவழைத்த மகாலட்சுமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான அய்யாவுவைத் தேடிவருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications