வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் பயங்கர மோதல்.. 3 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில். இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது கனவாய் புதூர் பகுதியை சேர்ந்த சிவிலிங்கம் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது நேதாஜி நகர் பகுதி ஆலங்காயம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வெங்கடேசன் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழுந்தார்.

சிவிலிங்கம் மற்றும் மோகன் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிவிலிங்கம் வேலூர் செல்லும் வழியில் உயிரிழந்தார். மோகன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த கோர விபத்து சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு சக்கர வாகனக்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications