நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ஓட, ஓட விரட்டி கொல்லப்பட்ட ஐடிஐ மாணவன்.. 3 பேர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது

    சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்தவர் ரமேஷ். 2 மாதங்கள் முன்பு மரணமடைந்தார். இவரது மகன் ரஞ்சித் (19). கிண்டி தொழில் நுட்பக் கல்லூரியில் ஐ.டி.ஐ படித்து வந்தார்.

    இந்நிலையில் இவர் ஜனவரி 19ம் தேதி இரவு குளக்கரை சாலை -ஷெனாய் சாலை சந்திப்பில் கத்தி குதித்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    கடைசியாக போன் பேச்சு

    கடைசியாக போன் பேச்சு

    அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரவு 11.45 மணி அளவில் கடைசியாக தனது தாயார் சரஸ்வதியிடம் பீச் ரயில் நிலயத்திலிருந்து வீட்டுக்கு திரும்ப வந்து கொண்டு இருப்பதாக போனில் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    சிசிடிவி காட்சிகளால் அம்பலம்

    சிசிடிவி காட்சிகளால் அம்பலம்

    லயோலா வளாகத்திற்கு எதிரே உள்ள குளக்கரை சாலை 2வது தெரு முதல் ஷெனாய் சாலை சந்திப்பில் ரஞ்சித் இறந்து கிடக்கும் இடம் வரை ரத்தம் சிதறி இருந்தது. எனவே போலீஸார் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் சிலர் ரஞ்சித்தை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

    கழுத்தில் கத்தி குத்து

    கழுத்தில் கத்தி குத்து

    நுங்கம்பாக்கம், ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கி நடந்து வந்த ரஞ்சித்தை குளக்கரை சாலையில் அந்த மர்ம நபர்கள் மடக்கி கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். அப்படியும், அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய ரஞ்சித் குளக்கரை சாலை -ஷெனாய் சாலை சந்திப்பில் விழுந்து இறந்துள்ளது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது.

    மூவர் அதிரடி கைது

    மூவர் அதிரடி கைது

    இந்த கொலைக்கு, முன்விரோதம் காரணமா, காதல் தகராறு காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்,
    வடபழனியை சேர்ந்த கார்த்தி, நவீன் குமார் மற்றும் போரூரை சேர்ந்த சிவகணேஷ் ஆகியோரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+