கொலை நகரமாகும் தலைநகரம்: சென்னையில் ஒரே வாரத்தில் 3 பெண்கள் கொலை
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மக்கிஸ் கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.

மேற்கு மாம்பலம் பகுதியில் பெண் வழக்கறிஞர் லட்சுமி சுதா என்பவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கணவரை பிரிந்து கடந்த 30 வருடங்களாக தனியாக வசித்து வரும் இவரை,மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவருடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு துலங்காத நிலையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் என்ற தெருவில் தனலெட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் கடந்த சில மாதங்களாகவே கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
- கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாரதா, 70 பெண் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் குன்றத்தில் தாய், மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர்.
- கடந்த மே மாதம் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி என்ற புற்றுநோய் மருத்துவர் கொலை செய்யப்பட்டார்.
- ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் ராயப்பேட்டையில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
- ஜூலை மாதம் சென்னை குரோம்பேட்டையில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார்.
- கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தனியாக வசித்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக சென்னை மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications