பேருந்தில் சிறுமியை சீரழித்த கயவர்கள்... குண்டர் சட்டம் பாய்கிறது
சேலத்தில் பேருந்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் குடும்பத்தில் கோபித்துக்கொண்டு தனியார் பேருந்தில் பயணித்த 15வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
இந்த வழக்கில் தனியார் டவுன் பஸ் நடத்துனர் பெருமாள்,டிரைவர்கள் மணிவண்ணன்,முருகன் மற்றும் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெருமாள்,மணிவண்ணன்,முருகன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் ஒருவருடம் சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர மாவட்டகாவல் துறை கண்காணிப்பாளர் ராஜன் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பேருந்தில் நம்பி பயணிக்கும் பயணிகள் இதுபோன்ற கொடூரர்களின் கைகளில் சிக்கி சீரழிவதை தடுக்க காவல்துறையும்,போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுத்து, இவர்களது உரிமங்களை ரத்து செய்து ஊரறிய செய்தால் மட்டுமே இவர்களைபோல் மக்கள் மத்தியில் நடமாடும் மனித மிருகங்கள் திருந்தும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும்.












Click it and Unblock the Notifications