தமிழகம் புதுவையில், இடி, சூறாவளியுடன் மழை - எச்சரிக்கும் வானிலை
தமிழகம் புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்யும் என்றும், சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
சென்னை: வெப்பச் சலனத்தால் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கரூர், திருச்சி, திருவள்ளூர், நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாகவே பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 9 செமீ மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் தண்ணீர் பஞ்சம் தீரும் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications