Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

94 சிறார்கள் கருகிய கும்பகோணம் தீவிபத்து... 13 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்காத துயரம்!

கும்பகோணத்தில் உள்ள பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியான வழக்கில் இன்று 9 பேரும் விடுவிக்கப்பட்டது நீதி கிடைக்காத நிலையாக கருதப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள கிருஷ்ணா ஆங்கில வழி பள்ளியில் நிகழ்ந்த தீவிபத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிபத்தில் 94 சின்னஞ்சிறு குழந்தைகள் உடல் கருகி பலியான சோக சம்பவம் நடந்து முடிந்து 13 ஆண்டுகளாக நிலையிலும் அதன் சோகவடுக்கள் இன்னும் ஆறாமல் உள்ளன.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்ட ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது. மிகச் சிறிய பள்ளியில் மொத்தம் 780 பேர் படித்து வந்தனர். கிட்டத்தட்ட ஆடு, மாடுகளை அடைத்து வைத்தது போல் அடைத்து வைத்திருந்தனர்.

Time line for Kumbakonam school fire accident

இதை விட அதி பயங்கரமான அபாயகரமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு குறுகலான இடத்தில் உள்ள அந்தப் பள்ளியில், சத்துணவுக் கூடம் கூரைக் கட்டடத்தில் அமைந்திருந்ததுதான். கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-இல் சமையல் செய்யும் போது தீவிபத்து ஏற்பட்டது.

இதில் தப்பிச் செல்ல வழியின்றி 94 குழந்தைகள் பலியாகினர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

2004 ஜூலை 20ம் தேதி- நீதிபதி கே.சம்பத் தலைமையிலான விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்தது.

நீதிபதி சம்பத் கமிஷன் தனது விசாரணையை 2004, ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது.

4 மாதங்களில் முடிய வேண்டிய கமிஷன் விசாரணை 4 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக 2005-ஆம் ஆண்டு ஜூன் 30ம் தேதி விசாரணை முடிவடைந்தது.

மார்ச்23, 2006- கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடக்கம்

ஜூலை 12, 2006- தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்

2012-இல் வழக்கு விசாரணை தீவிரமடைந்தது.

ஆக.3, 2012- கும்பகோணம் பள்ளி தீவிபத்து: 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அக்.19, 2012- குற்றவாளிகளுக்கு தண்டனையை நிர்ணயிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

ஜூலை 17, 2014- வழக்கு விசாரணை முடிவடைந்தது.

ஜூலை 30, 2014- பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி உள்ளிட்ட 4 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.51 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.

ஜன 9, 2015- இழப்பீடு தொடர்பாக உயர் நீதிமன்றம், ஒருநபர் ஆணையத்தை ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்டதூ.

மார்ச் 31, 2016- நீதிபதி சண்முகம் குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

அக். 18, 2016 -கூடுதல் வட்டியுடன் இழப்பீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல்

நவ.11, 2016- ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தாளாளர் சரஸ்வதி மரணம்

ஏப்.12- பள்ளி தாளாளர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், மற்ற சிலருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது.

ஆக.10- மேல்முறையீட்டு வழக்கில் அனைவரையும் விடுவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+