திருச்செந்தூர் கடலோரத்தில் கருப்பு உருவம்.. கிட்ட போய் பார்த்தால்? மூன்றரை அடி நீளத்தில் 50 கிலோ? அட
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலோரத்தில், மண்ணிலிருந்து பல்வேறு அரிய பொருட்களும், பொக்கிஷங்களும் கிடைத்து வரும் நிலையில், பரபரப்பு சம்பவம் ஒன்று இன்று காலையில் நடந்துள்ளது.. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் படல் பகுதிகளில் சீற்றம் நிறைந்து காணப்படுகிறது.. இதனால், கடற்கரை பகுதியில் கிட்டத்தட்ட 20 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு அரிப்பு ஏற்பட்டிருக்கிறதாம். எனவே, இதுகுறித்த நேரடி ஆய்வுகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த கடல் அரிப்பு காரணமாக, மண்ணில் புதைந்துபோன வரலாற்று பொக்கிஷங்கள், கடலோரங்களில் கிடைத்து வருகின்றன.. திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் கற்சிலைகள் , சிமெண்ட் சிலைகள், மரத்தினால் செய்யப்பட்ட சிலைகள் என அவ்வப்போது தென்பட்டு வருகின்றன.
கடலோரத்தில் சிலைகள்
கடலோரத்தில் இந்த சிலைகள் ஒவ்வொன்றும் திடீரென எழுந்து நிற்பதை போலவே இருக்கின்றன. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த சிலைகளை பார்த்து புல்லரித்து போகிறார்கள். 20க்கும் மேற்பட்ட சிலைகள், 4 கல்வெட்டுகள் என ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்புகூட, கடற்கரை மணலிலிருந்து திடீரென சூலாயுதம் வெளிவந்தது.. கடற்கரையில் உட்கார்ந்திருந்த பக்தர்கள் இதை பார்த்து பரவசமடைந்தார்கள். பிறகு அந்த சூலாயுதத்தை தொட்டு வணங்கினார்கள்.. முருகனை பார்க்க அன்னை பார்வதி சூலாயுத ரூபத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளதாக பக்தர்கள் நெகிழ்ந்து கூறினார்கள்.
இப்படி பழங்கால பொக்கிஷங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால், இவைகளை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மணலில் கருப்பு உருவம்
இந்நிலையில், திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள ஜே.ஜே. நகர் பகுதி கடற்கரையில், ஒரு அரிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது.. இந்த பகுதியில், அங்குள்ள பொது மக்கள் அதிகாலை நேரத்தில் வாக்கிங் போவார்கள். அதாவது, ஜெ.ஜெ. நகர் கடற்கரை பகுதியிலிருந்து வீரபாண்டி பட்டினம் கடற்கரைக்கு செல்லக்கூடிய பகுதி வரை வாக்கிங் செல்வது வழக்கமாகும்.
அப்படித்தான் இன்று காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோது, ஏதோ கருப்பான உருவம் மணலில் கிடந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர்.. பிறகு அருகில் சென்று பார்த்தபோது, இறந்த நிலையில், கடல் ஆமை என்று தெரியவந்தது.. அந்த ஆமை கிட்டத்தட்ட மூன்றரை அடி நீளமும், 50 கிலோ எடையும் இருக்குமாம்.. இது ஆலிவ் ரெட்லி வகையை சேர்ந்த ஆமை என்கிறார்கள்.

திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனம் இதுவாகும்.. தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும்போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது பாறைகளில் வேகமாக மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
டால்பின், ஆமைகள்
இப்படித்தான் கடந்த 2 வாரங்களில் மட்டும் 3 ஆமைகள் இறந்திருப்பதாக கூறுகிறார்கள்.. ஒரு ஆமை 100 கிலோ எடை கொண்டது. இன்னொரு ஆமை 10 கிலோ எடைகொண்டது.. நேற்றைய தினம் இறந்த ஆமையும் 10 கிலோ எடை கொண்டது.
இந்நிலையில், இன்று 50 கிலோ எடைகொண்ட 3½ அடி நீளமுடைய கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆமைகள் மட்டுமல்லாமல், டால்பின் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் இதே பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகிறார்கள்.. எனினும், பீச்சுக்கு வாக்கிங் வந்தவர்கள், இந்த ராட்சத ஆமையை ஆர்வமுடன் பார்த்து போட்டோ எடுத்து சென்றார்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications