திருச்செந்தூர் போலீசில் கோவில் நிர்வாகம் புகார்.. அய்யாகண்ணு மீது பாய்ந்தது வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அய்யாக்கண்ணு மேல் நடவடிக்கை எடுங்கள் - தமிழிசை- வீடியோ

  திருச்செந்தூர்: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு மீது திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  கடந்த 8 ம் தேதி திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட 4 பேர் மீது காவல்நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதையேற்று அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  Tiruchendur police files a case against farmers leader Ayyakannu

  கோயிலுக்குள் அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை வினியோகித்தற்காக, கோயில் நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார். இந்த நிலையில், நிர்வாகம் சார்பில் இன்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  அய்யாகண்ணு துண்டு பிரசுரம் வினியோகித்தபோது அதை பாஜக பெண் நிர்வாகி நெல்லையம்மாள் தடுத்தார். அப்போது, இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அய்யாகண்ணு, நெல்லையம்மாளை தகாத வார்த்தையால் திட்ட, பதிலுக்கு நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tiruchendur police has filed a case against farmers leader Ayyakannu for distributing pamphlets at Temple premises with out getting any permission from the authority.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற