For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் உள்பட 709 வாக்குசாவடிகள் பதட்டமானவை - ஆட்சியர் தகவல்

Google Oneindia Tamil News

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட 709 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக அம் மாவட்ட ஆட்சியர் .கருணாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டடபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்க்கு வந்துள்ள வாக்குபதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை வாக்கு பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

Tirunelveli district, 709 polling stations in the Heady

பழைய தகவலை அழிக்கும் பணியிலும் வாக்கு பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை சோதனை செய்யும் பணியில் பெல் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கருணாகரன், நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை,தென்காசி, கடையநல்லூர்,சங்கரன் கோவில், அம்பை, ஆலங்குளம், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கும் சேர்த்து 5,053 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 9460 வாக்கு பதிவு இயந்திரங்களும் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், 709 வாக்குசாவடி மையங்கள் மிகவும் பதட்டமானவைகளாக கருதப்படுகின்றன. இவற்றில் தேர்தல் காலத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றார். இந்த வாக்குச்சாவடிகள் தொடர்பான அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
Tirunelveli district collector karunakaran said, 709 polling stations in the Heady
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X