திருப்பத்தூரில் வசந்தியால் மானமே போயிடுச்சு.. நள்ளிரவு கதவை திறந்த கனகா.. ஜோலார்பேட்டை மாஸ் பிளான்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் இளம்பெண் செய்த செயல், பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. சமீபகாலமாகவே இளம்பெண்கள் கொலை வழக்குகளில் கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. அதைவிட இவர்கள் போலீசில் எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல், கூலாக தரப்படும் வாக்குமூலங்கள் அதைவிட கலக்கத்தை தந்துவிடுகிறது. ஜோலார்பேட்டையில் அப்படி என்ன நடந்தது?
நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு கொலை நடந்தது.. திருப்பனை பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான வசந்தா கணவரை இழந்தவர்.. பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவிட்டு, வசந்தா மட்டும் தன்னுடைய பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். வசந்தா வீட்டில் உள்ள கோழி கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருடு போயுள்ளது.

காணாமல் போன எலுமிச்சம் பழம்
அதேபோல 2 நாட்களுக்கு முன்பு எலுமிச்சை பழங்கள் திருடுபோயுள்ளது. இந்த திருட்டை செய்தது, எதிர்வீட்டில் வசிக்கும் இளம்பெண் செல்வரதி என்பது தெரியவந்தது. அதனால், அப்பெண்ணை வசந்தா கண்டித்துள்ளார்.
இதனால் கொந்தளித்து போன செல்வரதி, வீடுபுகுந்து வசந்தாவை தலையணையால் அமுக்கியே கொன்றுவிட்டார். பிறகு இந்த கொலையில் தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நகையை பறித்து, நகைக்காக நடந்த கொலையை போல திசை திருப்பிவிட்டார். பிறகு போலீசில் மொத்த உண்மையையும் சொல்லி, இப்போது சிறையில் உள்ளார் செல்வரதி.
இதேபோல இன்னொரு இளம்பெண் இன்று திருப்பத்தூரிலும் கைதாகி உள்ளார்.. இதுபோலவே நகை பறிப்பும் நடந்துள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ளது மண்டலவாடி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் கனகா.. இவருக்கு 65 வயதாகிறது.. இவரது மகன், வீட்டுக்கு பக்கத்திலேயே , சொந்தமாக வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகிறார்.
தனிமையில் கனகா
எனவே கனகா மட்டும் தன்னுடைய வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.. இந்நிலையில், கடந்த 31ம் தேதி நள்ளிரவு மர்ம நபர் கனகா வீட்டின் கதவை தட்டியிருக்கிறார்.. இதனால் கனகா கதவை திறந்ததுமே, அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவிய அந்த மர்மநபர், துணியால் முகத்தை மூடியிருக்கிறார்.. பிறகு, கட்டையால் கனகாவை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது கழுத்திலிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.. இந்த தாக்குதல் மற்றும் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை துவங்கினார்கள்.. அப்போதுதான், கனகாவின் மருமகள் வசந்தி மீது போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது. எனவே, வசந்தியிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், மொத்த உண்மையையும் சொல்லி, போலீசாரையே திணறடித்தார்.
கருத்து வேறுபாடுகள்
அதாவது, மாமியார் கனகாவுக்கும், மருமகள் வசந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வசந்தி, மாமியாரை பழி வாங்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தன்னுடைய மாமன் மகன் மைக்கல்ராஜ் என்ற 21 வயது இளைஞரை வரவழைத்துள்ளார்.
அதன்படி கடந்த 31-ந் தேதி நள்ளிரவு மைக்கல்ராஜ் கனகா வீட்டிற்கு சென்று மிளகாய் பொடி தூவி கட்டையால் அடித்து 4 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார் வசந்தியின் மாமன் மகன் மைக்கேல்ராஜ்.
போட்டுத் தள்ளிய மருமகள்
அதாவது, தன்னுடைய கணவர், மாமியார் பேச்சை கேட்டு நடப்பது கனகாவுக்கு பிடிக்கவில்லையாம்.. அதற்காகவே மாமியாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.. சம்பவத்தன்று, மைக்கேல் ராஜூடன் வசந்தியும் சென்றிருக்கிறார்.. நள்ளிரவு கனகா கதவை திறந்ததுமே, அங்குக் காத்திருந்த இருவரும் கனகாவின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், நகைப்பறிப்புக்காக நடந்த கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காகவும் வசந்தி இந்த திட்டத்தை மைக்கேல் ராஜுவிடம் சொல்லியிருக்கிறார். இப்போது, வசந்தி, மைக்கல்ராஜ் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.. அவர்களிடமிருந்து 4 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. கணவர் தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என்பதற்காக, மாமியாரையே மருமகள் போட்டுத் தள்ளிய சம்பவம் திருப்பத்தூரில் திகிலை தந்து வருகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications