அரசு பள்ளி மாணவர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்திய விவகாரம்.. திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை தூய்மை செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலான நிலையில், திருப்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை நம்பி ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்ளனர். ஏழைக் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், விரைவில் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, இலவச லாப்டாப், நான் முதல்வன் திட்டம், ஹைடெக் லேப், ஸ்மார்ட் போர்டு, கணினி பயிற்சி, நீட் தேர்வுக்கான பயிற்சி, ஐஏஎஸ் பயிற்சி என பல்வேறு முன்னுதரணமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு உண்டு உறைவிடப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏழை மாணவர்கள் பலரும் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை பெற்று வருகின்றனர். அரசின் முன்னணி கல்லூரிகளில் படிப்பதற்கு தேர்வாகி வருகின்றனர். ஒரு சில அரசுப் பள்ளிகளில் அரசுப் பள்ளி மாணவர்களை பல்வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களை படிப்பதைத் தவிர வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. ஆனால், பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், பள்ளி வளாகம், வகுப்பறை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யப்படுத்த நிர்ப்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை துடைப்பத்தைக் கொண்டு தூய்மை செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், நீர் தேக்க தொட்டியையும் துடைப்பத்தைக் கொண்டு மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கையில் புத்தகத்துடன் இருக்க வேண்டிய இடத்தில் துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்ய வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications