ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி என்னென்ன பேசப் போகிறார் ஸ்டாலின்.. டி.கே.எஸ். இளங்கோவன் லிஸ்ட்: வீடியோ
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பேச உள்ளார் என்று ராஜ்ய சபா உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: ஐ.நா. மனி உரிமை ஆணையத்தின் கூட்டம் ஜூன் மாதம் 15ம் தேதி தொடங்க உள்ளது. இதில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பேச உள்ளார்.
இதுகுறித்து, திமுகவின் ராஜ்ய சபா உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஒன்இந்தியாவிடம் அளித்த சிறப்பு நேர்காணல் இதோ:
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்தும், அங்கு நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் குறித்தும் மு.க. ஸ்டாலின் பேசுவதற்கான ஏற்பாடுகளை கழக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.

ஈழத்தமிழர் பிரச்சனை
ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து ஸ்டாலின் பேச உள்ளார். ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஐ.நா.விற்கு ஏற்கனவே ஸ்டாலின் கடிதம் கொடுத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது மனித உரிமை ஆணையத்தில் உரையாற்ற இருக்கிறார்.
டெசோ மாநாடு
தமிழ் ஈழத்திற்காக டெசோ மாநாட்டை நடத்தி அகில இந்திய அளவில் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து மாநாடு போட்டவர் திமுக தலைவர். தொடர்ந்து ஈழப் பிரச்சனைகளில் குரல் கொடுத்து வருபவர் அவர். ராஜீவ் காந்தி கூட அவருடன் கலந்து பேசி பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நகைச்சுவை
எனவே, திமுகவிற்கு இல்லாத உரிமை அதிமுகவிற்கு இல்லை. குறிப்பாக, எம்ஜிஆர் இல்லாத அதிமுகவிற்கு அது இருக்கிறது என்று சொன்னால் அது ஒரு நகைச்சுவையாகும். எம்ஜிஆர் இல்லாத அதிமுகவிற்கு கொள்ளையைத் தவிர வேறு எந்த கொள்கையும் கிடையாது. அவர்கள் இது குறித்து பேசக் கூடாது.
ஓபிஎஸ் குற்றச்சாட்டு
மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டவரை அங்கேயே இருந்த ஓபிஎஸ், முதல்வர் பதவியை இழந்த பிறகு பல சந்தேகங்களை எழுப்புவது ஏன் என்ற கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. இதுவரை ஓபிஎஸ் அதற்கு பதில் சொல்லவில்லை. ஓபிஎஸ் அதற்கு பதில் சொல்லிவிட்டு திமுக மீது குற்றச்சாட்டுக்களை முன் வைக்கலாம்.
அரசே கிடையாது
தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறதா என்றே தெரியவில்லை. குடிநீர் பஞ்சம், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை, மருத்துவர்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம் என்று அனைத்துத் தரப்பு மக்களும் வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். தொகுதிக்கு அமைச்சர்கள் சென்றால் கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக அவர்கள் செல்வதே கிடையாது.
தேறாது
அமைச்சர்களும் இரண்டு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த நேரம் சரியாக இருக்கிறதே தவிர மக்களை கவனிக்க நேரமில்லை. எனவே, அதிமுக அரசை பற்றி என்ன சொல்வது? நடைபெறாத அரசைப் பற்றி என்ன சொல்ல முடியும்?
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications