கட்சி தொடங்கி 3 மாதங்களிலேயே 3 கோஷ்டி; த.மா.கா பொதுச் செயலாளர் தாம்பரம் நாராயணன் கட்சிக்கு முழுக்கு!
சென்னை: ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு நிர்வாகிகள் தாவி வரும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய 3 மாதங்களிலேயே கோஷ்டி பூசல்களால் தடுமாறத் தொடங்கிவிட்டது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணன் த.மா.கா.வில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கினார். கடந்த மே 22-ந் தேதி மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை வாசன் அறிவித்தார்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மூத்த துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இது தவிர 9 துணைத் தலைவர்கள், 20 பொதுச் செயலாளர்கள், 32 செயலாளர்கள், 32 இணைச் செயலாளர்கள், 25 கொள்கை பரப்புச் செயலாளர்கள், 70 செயற்குழு உறுப்பினர்கள், 14 அணிகளின் தலைவர்கள், 75 மாவட்டத் தலைவர்கள் என 377 பேருக்கு பதவி வழங்கப்பட்டது.
அப்படியும் தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என வாசனிடம் பலர் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தை 3ஆக பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி.நெடுஞ்செழியன் கடந்த ஜூலை 12-ந் தேதி த.மா.கா.வில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில் த.மா.கா. மாநிலப் பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணனும் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசனுக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து தாம்பரம் நாராயணன் கூறுகையில், கட்சி ஆரம்பித்த 3 மாதங்களிலேயே த.மா.கா.வில் 3 கோஷ்டிகள் உருவாகிவிட்டன. கோவை தங்கம், ஞானசேகரன், விடியல் சேகர் ஆகியோர் மூவர் அணியாக செயல்பட்டு உழைப்பவர்களை எல்லாம் வெளியேற்றி வருகின்றனர். தமிழக வரலாற்றிலேயே 500-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் நியமித்த கட்சி த.மா.கா. மட்டுமே. கூட்டணிக்காக மற்ற கட்சிகள் தேடி வரும் நிலையில் விஜயகாந்த் கட்சி நடத்துகிறார். ஆனால், கூட்டணிக்கு ஒரு கட்சியை மட்டுமே வாசன் நம்பியிருக்கிறார் என்றார்.
தமிழகத்தில் இது தாய் கட்சிக்கு திரும்பும் காலம் போல!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications