சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது... திமுகவின் கோரிக்கை நிறைவேறுமா?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அ.தி.மு.க. வெற்றிப் பெற்று, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அரசு மீண்டும் அமைந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் 15வது சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரை முடிவடைந்த உடன் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வருகிற 23ந் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 17ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், கூட்டம் நடைபெறவில்லை.

இன்று காலை அவை கூடிய உடன் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கியது. மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செம்மலை உரையை தொடங்கி வைத்து பேசினார்.
21ம் தேதியான நாளையும் (செவ்வாய்க்கிழமையும்) இந்த விவாதம் தொடர்ந்து நடைபெறும். 22ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் தங்களின் விவாதத்தை முடிப்பார்கள்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் முன் வைத்த விவாதத்துக்கு 23ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசுவார். அன்று சட்டமசோதாக்களை ஆய்வு செய்து நிறைவேற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்.
திமுகவின் கோரிக்கை நிறைவேறுமா?
பிரதான எதிர்க்கட்சியாகியுள்ள திமுகவுக்கு அவையில் 89 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஒவ்வொரு நாளும் திமுக சார்பில் 2 பேர் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 3 பேர் பேசுவதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி நகரும் நாற்காலியில் வந்து பேரவையில் அமரும் வண்ணம் உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் திமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாகவும், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாகவும் திமுக விவாதிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் சட்டசபை கூட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications