ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதே 'குரு உத்சவ்': தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதே குருவைக் கொண்டாடுவோம் எனப் பொருள் தரும் 'குரு உத்சவ்' என்பதன் நோக்கம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவைக் கொண்டாடி மகிழ்கிறோம் தமிழ்நாட்டில். அதற்கேற்ப சிறந்த ஆசிரியராகவும், ஆட்சியாளராகவும் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

நல்ல குடிமக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் தியாகத்தைப் போற்றுவோம். இதைத்தான் மத்திய அரசு 'குரு உத்சவ்', அதாவது 'குருவைக் கொண்டாடுவோம்' என்கிறது.
ஆனால், அதையும் அரசியலாக்கி, எது அவசியம் எது அரசியல் என்றில்லாமல் இங்கே சிலர் விமர்சித்துக் கொண்டிருந்தாலும், நோக்கம் ஆசிரியப் பெருமக்களை பெருமைப்படுத்துவதே ஆகும்.
ஆசிரியப் பணி, இறைப்பணிக்கு நிகரானது. அத்தகைய உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும், அவர்களால் அறிவொளி பெறும் மாணவச் செல்வங்களுக்கும் உள்ளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications