For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபை நிகழ்வில் திமுக பங்கேற்காது.. ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபை நிகழ்வில் திமுக பங்கேற்காது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் | திமுக அமளி- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபை நிகழ்வில் திமுக பங்கேற்காது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. சபாநாயகர் தலைமையில் சட்டசபை நடந்து வருகிறது. இது இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும்.

    TN CM should resign on Tuticorin issue, otherwise DMK attend assembly says, Stalin

    சட்டசபை கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து திமுக விவாதம் செய்தது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையைவிட்டு வெளியேறியது. வெளியே வந்தபின் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபை நிகழ்வில் திமுக பங்கேற்காது. மொத்தமாக சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம்.துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். துப்பாக்கி சூடு என்ற வார்த்தை கூட முதல்வர் அறிக்கையில் இல்லை. தனியார் ஆலை ஒன்றுக்காக துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ஆலையை மூடும் அறிவிப்பு கண்துடைப்பு.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். அரசாணையில் முக்கியமான விஷயம் எதுவும் இல்லை. நீதிமன்றம் சென்றால் ஸ்டெர்லைட் பயனடையும் வகையில் அரசாணை உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக வழக்கு தொடுக்கும். தூத்துக்குடி பிரச்சனையில் உண்மையை மறைத்துள்ளனர் என்று ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

    English summary
    TN CM should resign on Tuticorin issue, otherwise DMK attend assembly says, Stalin after came out of TN Legislative Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X