தமிழகத்தில் ஒரு எம்எல்ஏகூட இல்லாமல் பாஜக ஆட்சி நடத்துகிறது- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
ஒரு எம்எல்ஏகூட இல்லாமல் பாஜக தமிழகத்தில் ஆட்சி நடத்துகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

தாராபுரம்: தமிழகத்தில் ஒரு எம்எல்ஏக்கூட பாஜகவுக்கு இல்லை. ஆனால் மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்துவது, மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்தப்படும் எட்டு வழிச்சாலை உள்ளிட்டவற்றை பாஜக தொடங்கும் பட்சத்தில் அதற்கு ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவப்பதே இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் தாராபுரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.

வேலையின்மை
அப்போது அவர் கூறுகையில் சிறுபான்மை மக்களை மட்டும் அல்ல இந்துக்களையும் ஏமாற்றி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்பதாகவும், வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாகவும் பல வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியவர் பிரதமர் மோடி.

கோமாவில் தமிழக அரசு
ஜெயலலிதா என்று மருத்துவமனையில் படுத்தாரோ அன்றிலிருந்து தமிழக அரசும் கோமாவில் படுத்துவிட்டது. சில மாநிலங்களில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்களை வைத்து கொண்டும், கட்சிகளை உடைத்தும் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது.

காங்கிரஸ் தலைமை
ஆனால் தமிழகத்தில் மட்டும் எம்.எல்.ஏக்களே இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதில் காங்கிரஸ் தலைமை ஏற்றால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்.

உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் காங்கிரஸை ஒதுக்கிவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் எந்த திட்டப் பணிகளும் மக்களுக்கு சென்றடைவதில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications