தமிழக விவசாயிகள் தலையில் பேரிடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
காவிரியில் நமக்கான உரிமையை உச்சநீதிமன்றம் நிலைநாட்டுமான என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் டெல்டா விவசாயிகள்.
Recommended Video

தஞ்சாவூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் நியாயம் வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முற்றிலும் தமிழகத்தின் நியாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
இருக்கும் அளவையும் சுப்ரீம் கோர்ட் குறைத்திருப்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க அநீதியாக செயல்பட்டு வரும் கர்நாடகத்தின் செயல்பாட்டையும், நிலைப்பாட்டையும் ஆதரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதே என்று விவசாயிகள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.

போராட்டங்களுக்கு பலன் இருக்குமா?
இத்தீர்ப்புக்காக டெல்டா விவசாயிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். காவிரி நதியில் நமக்கான பங்கை முழுமையாக பெற வலியுறுத்தி டெல்லியிலும் டெல்டாவிலும் நடந்து வரும் போராட்டங்களுக்கு பலன் தரும் வகையில் தீர்ப்பு இருக்குமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மொத்தமாக அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது தீர்ப்பு.

விவசாயிகள் தற்கொலை
வரலாறு காணாத வகையில் பல நூறு விவசாயிகள் விவசாயம் பொய்த்ததால் மாண்டு போகும் பேரவலம் நிகழ்ந்தது. இன்னமும் காவிரி நீரை நம்பி மட்டுமே டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

மேலாண்மை வாரியத்தில் துரோகம்
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால் மத்திய பாஜக அரசு தமிழர்களை வஞ்சிப்பதற்காகவே மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றது.

அநீதியான தீர்ப்பு
இப்போது காவிரி வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வந்துள்ளது. இதை தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை. நியாயமாகவே நடந்து கொள்ளாத கர்நாடகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

பெரும் கேள்விக்குறி
காவிரி நதியை நம்பித்தான் நெற்களஞ்சியமான டெல்டா பாசனப் பகுதி இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகாவின் வஞ்சனையில் முப்போகம் விளைச்சல் கண்ட டெல்டா ஒரு போக சாகுபடிக்கே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications