For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி நதிநீரை பெற கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு- ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

காவிரியில் உரிய பங்கை பெற்றிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. சாதகமான தீர்ப்பு பெற்று சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

TN to file plea against Karnataka over Cauvery issue

சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முக்கிய அம்சங்கள் :

•ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு உரிய பங்கு தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்து விடவில்லை.

•மேகதாது அணை விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

•மேகதாதுவில் அணை கட்ட மாட்டோம் என கர்நாடகா ஏற்கனவே தெரிவித்துள்ளது.

•உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலை தொடர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

•கர்நாடக முதல்வரின் சுதந்திர தின அறிவிப்பு டெல்டா விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

•தமிழக அரசின் அனுமதி பெறாமல் காவிரியில் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு செயல்படுத்த முடியாது.

•அனுமதியின்றி காவிரியில் கர்நாடக அரசு அணை கட்ட முயன்றால் தமிழக அரசு சட்ட ரீதியாக சந்திக்கும்

•உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் காவிரி வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்து கொண்டுள்ளது.

•2007ம் ஆண்டு இறுதி ஆணையை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்துதல் குழுவை மத்திய அரசு அமைக்கவில்லை எனக்கூறினார்.

English summary
Tamil Nadu Chief Minister J.Jayalalitha Thursday announced in assembly house, decided to file a petition in Supreme Court Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X