பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி சிறப்பு நிகழ்வாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

TN Government announces Jan 12 as special holiday

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட செல்வர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நீடிப்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக வரும் 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Government announces Jan 12 as special holiday

இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணிக்காக்கும் பொருட்டு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடனும் சுற்றத்துடனும் களித்திடும் வகையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pongl Festival is going to be celebrated on Jan 14. TN Government announces January 12 as special leave.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X