"என் சாவுக்கு 2 அதிகாரிகளே காரணம்" டிஜிபிக்கு மெசேஜ் அனுப்பிய தாம்பரம் போக்குவரத்து அதிகாரி தற்கொலை!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மருத்துவ விடுப்பு நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த அரசு பேருந்து ஊழியர் யுவராஜ் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு தமிழக டிஜிபிக்கு குறுஞ்செய்தியை அனுப்பிய யுவராஜ், "எனது தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம்" என தெரிவித்துள்ளார்.
மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனையில் ஜூனியர் என்ஜினியராக யுவராஜ் பணிபுரிந்து வந்தார். கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு 3 மாதமாக ஊதியமும் வழங்கப்படவில்லையாம். மேலும் யுவராஜை வேலைக்கு வரக் கூடாது என அதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அவர் கழுத்து வலிக்காக விடுப்பு கேட்ட நிலையில் அதை மேலதிகாரி ஒருவர் நிராகரித்ததாகவும் யுவராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் தனது மரணத்திற்ரு இரு அதிகாரிகள்தான் காரணம் என அவர் அந்த குறுஞ்செய்தியில் அவர்களது பெயரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
யுவராஜுக்கு மருத்துவ காப்பீட்டு நிதி கூட வழங்காமல் நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் யுவராஜ் மனஉளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மறைமலைநகர் அருகே ரயில் முன் பாய்ந்து யுவராஜ் தற்கொலை செய்து கொண்டாராம்.
அவர் இறப்பதற்கு முன்பு தமிழக டிஜிபிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் தனது சாவுக்கு உயரதிகாரிகள் இருவர்தான் காரணம் என குறிப்பிட்டிருந்த அவர், தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்று குடும்பத்திற்கு அளிக்குமாறு கோரிக்கையையும் அவர் முன் வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications