ஜெ. பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களின் வழக்குகளுக்கேற்ப ஜெயலலிதா பிறந்த நாளில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று வருபவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரி வருகின்றனர். அதன்படி ஜெயலலிதா பிறந்தநாளன்று சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

TN government decides to release prisoners who is in more than 10 years

இதற்காக கைதிகளின் விவரங்களை பெற 9 மத்திய சிறைச்சாலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் அவர்களின் வழக்குகளின் தன்மைக்கேற்ப விடுவிக்கப்படவுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டு சிறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களையும் விடுவிக்க முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Government decides to release prisoners who is in prison for more than 10 years.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற