For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை சரிவர பின்பற்றாததால் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் உரிமத்தை புதுப்பிக்க முடியாது...வீடியோ

    சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாததால் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் 58 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மரத்தடியில் அமர்ந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு பெண்கள்,குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் போராடி வருகின்றனர்.

    TN government says permission to function Sterlite industry regretted

    நாளுக்கு நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட அரசு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது : தூத்துக்குடி மாவட்ட மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு -1 31.3.2018க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது.

    அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அந்தக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் 9.4.2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இந்த முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் கூறியுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    TN government says permission to function Sterlite industry regretted as it is not following the norms of tamilnadu pollution control board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X