மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே வீதியில் இறங்கி போராடியது.

இது சர்வதேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு புரட்சியாக போற்றப்படுகிறது. இப்புரட்சிக்குப் பின்னர் தடையின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. தற்போது மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15-ந் தேதி முதல் 31-ந் தேதிக்குள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இப்போட்டிகளைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications