ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு புகார் வழக்கு: தூசு தட்டும் தமிழக அரசு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சமரசம் எட்டப்பட்டதையடுத்து, வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்நிலையில், ஸ்டாலின், அவரது உதயநிதி மீதான நில அபகரிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
அதில், வழக்கில் சமரசம் ஏற்பட்டாலும் குற்ற வழக்கு என்பதால் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்படவில்லை என்றும், புகார் அளித்தவரே நீதிபதி முன் மிரட்டல் குறித்து வாக்குமூலம் தந்துள்ளார் என்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications