வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என வருவாய் துறைக்கு பெயர் மாற்றம்...
தமிழகத்தின் வருவாய் துறை என்பது தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் முக்கிய துறையான வருவாய் துறை என்பது தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு துறைகளுக்கும் தாய்த் துறையாக திகழுவது வருவாய்த் துறையாகும். அனைத்து நிலங்களும் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.

நிலம் தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதும், நிலம் தொடர்பான ஆணைகளை வெளியிடுவதும், அரசு நிலங்களை பாதுகாப்பதும், நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதும் வருவாய்த் துறையின் முக்கிய கடமைகள் ஆகும்.
வருவாய்த் துறை செய்யும் பணியின் அடிப்படையில் 2002-ஆம் ஆண்டிலிருந்து வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என அழைக்கப்படுகிறது. வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை, நில நிர்வாக துறை, நில சீர்திருத்தத்துறை, நகர நில உச்சவரம்பு மற்றும் நகர நிலவரித்துறை மற்றும் நில அளவை துறை என 5 துறைகளை உள்ளடக்கியது.
சுனாமிக்கு பின்...
கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி சுனாமி தாக்கிய பின்னர் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்கும் பணிகளில் வருவாய் துறை பேசப்பட்டது. அதன் பின்னர் வருவாய் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முதல்வர் ஆவார்.
இந்த ஆணையம், பேரிடர் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்தது. பெரும்பாலான மாநிலங்களில், வருவாய் துறையானது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக வருவாய் துறையின் இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications