Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறைந்த விலையில் துவரம் பருப்பு... சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் விற்பனை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு ரூ.110 விலையில் விற்பனை தொடங்கியுள்ளது.

போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

TN Govt started to selling Toor dal at subsidised rates

இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பதுக்கல்காரர்கள், பருப்பு வகைகளைப் பதுக்கி, தட்டுப்பாட்டை அதிகரித்து மேலும் விலையை உயர்த்தினர். தற்போது சந்தையில் சில்லறை விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ. 200ஐத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்தல், பருப்பு வகைகளைப் பதுக்குவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. .

இந்நிலையில், குறைந்த விலையில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் 91 கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 110 விலையில் துவரம் பருப்பு விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

சென்னையில் மட்டும் 56 இடங்களில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்பட உள்ளன. டி.யூ.சி.எஸ்., வட சென்னை, சிந்தாமணி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் 36 கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. 20 அமுதம் விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடைகள் அனைத்தும் காலை 10 முதல் இரவு 8 வரை செயல்படும்.

இந்த துவரம் பருப்பு அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகளாக விற்கப்படும். அரை கிலோ ரூ.55-ம், ஒரு கிலோ ரூ.110-க்கும் கிடைக்கும்.

தீபாவளிப் பண்டிகை விரைவில் கொண்டாடப்பட உள்ளதாலும், கடைகளில் விலை அதிகமாக இருப்பதாலும் கூட்டுறவு அங்காடிகளில் துவரம் பருப்பு வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே சில கடைகளில் முன்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+