பிஇ அட்மிஷனில் தமிழகத்தில் படித்தவர்களுக்கு மட்டும் மாநில ஒதுக்கீட்டு இடங்கள்.. ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் படித்தவர்களுக்கு மட்டும் தான் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் என்பதை உறுதி செய்யும்வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசுமுன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், முதலில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொறியியல் கலந்தாய்வு தமிழகத்தில் நடப்பாண்டிற்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள முதல் 10 மாணவர்களில் 5 பேர் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள மாநிலங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மாணவர்கள் பாதிப்பு
கல்வியை அனைவருக்கும் வழங்கவேண்டும், எல்லையின் பெயரால் கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ற போதிலும், தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறித்துவிட்டு பிற மாநிலங்களில் படித்தவர்களுக்கு கல்வி வாய்ப்பு அளிப்பதை ஏற்க முடியாது.

சிறு உதாரணம்
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி கேரள மாநிலத்தில் படித்தவர். முறையே மூன்றாம் இடம், நான்காம் இடம் மற்றும் ஏழாம் இடத்தை பிடித்தவர்கள் ஆந்திரத்திலும், ஐந்தாம் இடத்தை பிடித்த மாணவர் தெலுங்கானாவிலும் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் ஆவர். பிறமாநிலங்களில் படித்து தமிழக மாணவர்களுக்கான இடங்களை பறிக்கும் மாணவர்களுக்கு இவர்கள் சிறு உதாரணம் மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டு மாணவர்களின் வாய்ப்புகளை பறித்து விடுகின்றனர்.

தமிழ்நாட்டில் தலைகீழான நிலை
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எவரும் பிற மாநிலங்களில் உள்ள முறை சார்ந்த அரசு மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரிகளில் சேர முடியாது. அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் என்பதால் தங்கள் மாநில மாணவர்களின் வாய்ப்பைப் பறித்து இடம் வழங்க முடியாது என்று கூறி கல்லூரிகள் கதவை மூடி விடும். ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழக அரசின் ஆணை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் தாய் தந்தையர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் தமிழகத்திலுள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்
உண்மையில் பணி நிமித்தமாக வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழக கல்லூரிகளில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடம் அளிப்பதில் தவறு இருக்க முடியாது. ஆனால், ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு பிற மாநில பாடத்திட்டம் தான் சரியானதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தையும், தமிழகப் பள்ளிகளையும் திட்டமிட்டு புறந்தள்ளிவிட்டு செல்பவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் - மருத்துவக் கல்லூரிகளில் இடம் தருவது தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

நுழைவுத் தேர்வில் எளிதில் வெற்றி
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஆந்திர மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் சேர்வது அதிகரித்து வருகிறது. காரணம் அம்மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் படித்தால் ஐ.ஐ.டி. என்.ஐ.டி உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற்று சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை தான். இது ஓரளவு உண்மையும் கூட.

தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிப்பு
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புக்கு 6 பாடங்கள் உள்ளன. ஆனால், ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவிலுள்ள பள்ளிகளில் 5 பாடங்கள் மட்டுமே உள்ளன. ஆந்திரத்தில் உள்ள மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் படித்து அமெரிக்காவுக்கு செல்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதால், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக அதற்கான பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வழக்கமான பாடங்களுக்கு குறைந்த நேரமே ஒதுக்கப்படுவதுடன், அப்பாடங்களுக்கான தேர்வுகள் மிகவும் எளிதாகவும், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. இதனால், அவர்கள் மிகவும் எளிதாக அதிக மதிப்பெண்களை பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்புக்களை பறித்துச் செல்கின்றனர். இந்த வகையில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் வாய்ப்பிழந்துள்ளனர்.

சமூக அநீதி
பிற மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்போது கூட முதல் 10 இடங்களில் வந்த 4 வெளி மாநில மாணவர்களில் மூவருக்கு ஐ.ஐ.டி.க்களில் சேருவது தான் லட்சியம் என்றும், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் இடத்தில் சேர்ந்தாலும் ஐ.ஐ.டியில் இடம் கிடைத்தால் அண்ணா பல்கலையிலிருந்து விலகி அங்கு சேரப்போவதாகவும் கூறியுள்ளனர். இவ்வாறு செய்வதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடம் பறிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய சமூக அநீதி என்பதில் சந்தேகமில்லை.

வலியுறுத்தல்
எனவே, வெளி மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களை தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கக்கூடாது. தமிழகத்தில் படித்தவர்களுக்கு மட்டும் தான் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications