தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் விருது : செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

  தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சலுகைகள்- வீடியோ

  சென்னை : தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்றும், கல்வித்துறையில் பல புதிய திட்டங்கள் செயல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முதல்வர், மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

   TN Minister says that Students from Tamil medium awarded with special Award

  மேலும், இந்த விருதுக்காக மாவட்டம்தோறும் 30 மாணவர்கள் வீதம் 960 பேருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும், விருதுடன் பரிசுத்தொகையாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 10 ஆயிரமும், 12 வகுப்பு மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

  10 வகுப்பு முடித்து சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்கப்பட்ட 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் குழப்படையாமல் தேர்ந்தெடுக்க உதவ முடியும் என்றும், லேப்டாப் கிடைக்காத மாணவர்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

  மாநிலம் முழுவதும் இருந்து 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் 4 வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.

  மாநிலம் முழுவதும் 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், அதில் பயிற்சி பெற 75000 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருப்பதாகவும் அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TN Minister says that Students from Tamil medium awarded with special Award. He also added that New Foreign exchange of Student Scheme will be implemented from this year.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற