என் ஆதரவு யாருக்குன்னு உங்ககிட்ட சொல்ல முடியாது... வைரலாகும் அமைச்சர் வளர்மதி வாக்குவாதம் ஆடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழக அமைச்சரான ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதி தாம் யாரை ஆதரிப்பேன் என பகிரங்கமாக கூற முடியாது என வாக்காளர் ஒருவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் முதல்வர் பதவிக்காக பேராசைப்படும் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தலைமையில் ஒரு அணியுமாக பிளவுபட்டு நிற்கிறது.

TN Minister Valarmthi's phone audio goes viral on Social Media

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு தொகுதி மக்களே! உங்கள் எம்.எல்.ஏ.வை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வலியுறுத்துங்கள் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகிறது.

இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளனர். அமைச்சரும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான வளர்மதிக்கு பெண் வாக்காளர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நீங்கள் ஆதரியுங்கள் என்ற கோரிக்கை விடுத்தார். இதற்கு, நீங்க எனக்கா ஓட்டுப் போட்டீங்க.. என்னுடைய இரட்டை இலை சின்னத்துக்குதானே ஓட்டுப் போட்டீங்க? என்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்தும் பேசியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த ஆடியோ அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu Minister Valarmathi's phone audio on ADMK Crisis went viral on Socia Media.
Please Wait while comments are loading...