இன்னும் 13 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு போனால் சசியால் முதல்வராக முடியாது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தால் அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவால் முதல்வராக முடியாத நிலை உருவாகும்.

தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் கட்சிகளின் பலம் விவரம்:

TN political crisis: How the numbers add up

அதிமுக கூட்டணி: 136

அதிமுக - 133

கொங்கு இளைஞர் பேரவை-1

மக்கள் ஜனநாயக கட்சி- 1

முக்குலத்தோர் புலிப் படை-1

ஜெயலலிதா நீங்கலாக மிச்சமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை- 135

தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 129

முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 6

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 117

ஆகையால் தற்போதைய நிலையில் மேலும் 13 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தந்துவிட்டால் சசிகலாவால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அவரால் முதல்வராக முடியாது. தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு கவிழும் நிலை உருவாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala Natarajan carted 129 MLAs in three buses and parked them at a resort, 120 kilometres away from Chennai. Sasikala needs the support of 117 MLAs if she is to become Chief Minister of Tamil Nadu.
Please Wait while comments are loading...