For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐடி தகவல்களைத் தெரிவிக்காத... அதிமுக, தேமுதிக, மதிமுக கட்சிகளின் 4 வேட்பாளர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக வேட்பாளர்களில் ரூ. 11 கோடியிலிருந்து 17 கோடி வரை சொத்து மதிப்பு கொண்ட முக்கிய கட்சிகளைச் சேர்ந்த நான்கு பேர் தங்களது வருமான வரி குறித்தான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ்' (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பானது மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

TN polls- 4 candidates worth over Rs 11 crore have not filed Income Tax Returns

அதன்படி, தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் குறித்தும் இந்த அமைப்பானது ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 1,107 பேர். இதில் 997 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம். 110 பேரின் பிரமாணப் பத்திரங்கள் தெளிவாக இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, 114 வேட்பாளர்கள், தங்களது பான் அட்டை விவரங்களையும், 284 பேர் வருமானவரி தொடர்பான விவரங்களையும் வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்களில் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த ரூ. 11 கோடி முதல் 17 கோடி வரை சொத்து உடையவர்களில் நான்கு பேர் தங்களது வருமான வரி குறித்த விபரங்களைத் தெரிவிக்கவில்லை என சுட்டிக் காட்டியுள்ளது.

அவர்களின் விபரமாவது:

காங்கேயம் தொகுதி தேமுதிக வேட்பாளரான முத்து வெங்கடேஸ்வரனின் சொத்து மதிப்பு ரூ. 17 கோடியே 43 லட்சத்து பதினோராயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்திரண்டு ஆகும். வேட்புமனுவில் இவர் அளித்துள்ள பேன் கார்டு தகவல்படி, இவர் இன்னும் வருமான வரித்துறை தாக்கல் குறித்த விபரங்களை அளிக்கவில்லை.

இதேபோல், நெய்வேலி அதிமுக வேட்பாளர் ராஜசேகரின் சொத்துமதிப்பு ரூ. 12 கோடியே 2 லட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்று ஐந்து ஆகும். இவரும் வருமான வரித் தாக்கல் குறித்த விபரங்களைத் தெரிவிக்கவில்லை.

குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனின் நிலைமையும் இதே. இவரது சொத்து மதிப்பு ரூபாய் 11 கோடியே 86 லட்சத்து ஐம்பத்து மூன்றாயிரத்து எழுபத்திரண்டு ஆகும்.

உசிலம்பட்டியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பாஸ்கர சேதுபதியின் சொத்துமதிப்பு ரூ. 11 கோடியே 73 லட்சத்து 88 ஆயிரத்து இருநூற்றுப்பத்து ஆகும். இவரும் கூட தனது வருமான வரித் தாக்கல் ரிட்டன்ஸ் விபரங்களைத் தெரிவிக்கவில்லை என இந்த அறிக்கை கூறுகின்றது.

மேலும், இந்த அறிக்கையின் படி, மொத்த தமிழக வேட்பாளர்கலில் 284 பேர் அதாவது 28 சதவீதம் பேர் தங்களது வருமான வரித் தாக்கல் விபரங்களைத் தெரிவிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

வயது மற்றும் பாலின விபரம்:

தமிழக வேட்பாளர்களில் 537 பேர் அதாவது 54 சதவீதத்தாரின் வயது 25 முதல் 50க்குள்ளாக அமைந்துள்ளது. 51 முதல் 80 வயதுடைய வேட்பாளர்கள் 458 பேர் அதாவது 46 சதவீதம் என இந்த அறிக்கை கூறுகின்றது. இந்தப் பட்டியலில் இரண்டு வேட்பாளர்கள் மட்டும் 80 வயதுக்கும் அதிகமானவர்கள்.

முக்கிய கட்சி வேட்பாளர்களான 997 பேரில் 96 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இது வெறும் 10 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
There are three four candidates contesting the Tamil Nadu elections who have assets ranging between Rs 17 crore to Rs 11 crore and have not declared their income tax details. These details cropped up in a report prepared by the Tamil Nadu Election Watch and the Association for Democratic Reforms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X