தமிழக அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்டு வீணாய்ப் போகாதீர்கள்.. கூறுகிறார் இல.கணேசன்
திருச்சி: தமிழக அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு வீணாய்ப் போகாமல், இந்தியை கற்க முன்வர வேண்டும் என்று தமிழக இளைஞர்களுக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அறிவுரை கூறியுள்ளார்.
திருச்சி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படி அறிவுரை கூறினார்.
வானொலியில் கட்டாய இந்தி நிகழ்ச்சிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளும் இதை எதிர்த்துள்ளன. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்கள் கேட்டபோது இல.கணேசன் அளித்த பதில்..

இந்தி திணிப்பு - கற்பனை
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக சொல்வது கற்பனை கதை. விருப்பமுள்ளவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்ளலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

வீணாய்ப் போகாதீர்கள்
தமிழக இளைஞர்கள், அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு வீணாகப்போகாமல் இந்தியை கற்கவேண்டும். பல மொழி கற்பது நமக்கு நல்லதுதான்.

சாமி பேச்சு
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி விடுத்துள்ள கோரிக்கை விடுத்துள்ளதை பற்றி கேட்கப்படுகிறது.

தவிர்ப்பது நல்லது
கட்சியில் முக்கிய பொறுப்புள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கும் கருத்துக்கள் கட்சியின் கருத்துக்களாக மாறுவது இயல்புதான். இதுபோன்ற கருத்துக்களை தனிப்பட்ட நபர்கள் தவிர்ப்பது நல்லது.

சாமி பேச்சைக் தடுக்க முயற்சிப்போம்
சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சேவுக்கு விருது வழங்க வேண்டும் என கூறிய கருத்துக்களை உரியவர்களிடம் சொல்லி இதுபோன்ற கருத்துக்கள் வெளிவராதவண்ணம் நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும்.

தூர் வார வேண்டும்
தமிழகத்தில் உள்ள வீராணம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும், இப்படிப்பட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீரை பாதுக்காக்க வழிவகை செய்திடவேண்டும். தண்ணீர் வீணாக போவதை தடுத்து, வீணாக கடலில் கலப்பதை சேமிக்கும் வகையிலான திட்டங்களை தமிழக அரசு கொண்டுவரவேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தால் விவசாயம் போச்சு
நூறு நாள் வேலை திட்டம் மிகச்சிறந்த திட்டம்தான். ஆனால் இந்த திட்டத்தால் விவசாயத்திற்கு பாதிப்புள்ளது. இந்த குறைகளை களைவதற்கு தற்போது ஆய்வுகள் நடந்துகொண்டு வருகின்றது. நிச்சயம் அந்த குறைகள் சரி செய்யப்படும்.

யாரையும் சுட்டுக் கொல்லவில்லை
மோடி பிரதமர் ஆனபிறகு தமிழக மீனவர்கள் யாரும் சுட்டுக்கொல்லப்படவில்லை. ஆனால் சில மீனவர்களையும், படகுகளையும் சிறைபிடிப்பது தொடர்கிறது. இவற்றை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்
2016 சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இந்த கூட்டணியில் கொள்கை ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும். இந்த கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என்றார் கணேசன்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications